Enable Javscript for better performance
விபத்தில் இருந்து தப்பிய விமானம்- Dinamani

சுடச்சுட

    
    aeroplane-puncture

    சென்னை, மீனம்பாக்கத்தில் தனியார் விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்தது. இந்நிலையில், விமானி சாமர்த்தியமாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தி விபத்தைத் தவிர்த்தார்.
    மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகலில் வந்தது. அந்த விமானம் ஓடு பாதையைத் தொட்டபோது விமானத்தின் வலதுபக்க டயர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்தன.
    இந்நிலையில் விமானி சுதாரித்து, விமானத்தை சாமர்த்தியமாக ஓடுபாதையில் செலுத்தி விபத்தைத் தவிர்த்தார். இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயமின்றித் தப்பினர். விமானத்தின் டயர் வெடித்தது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai