Enable Javscript for better performance
35 பெண்கள் பங்கேற்கும் தொழில் முனைவோர் பயணம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    35 பெண்கள் பங்கேற்கும் தொழில் முனைவோர் பயணம் தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    protest

    புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வத்துடன் சிறப்பு சுற்றுப் பயணத்தில் பங்கேற்க வியாழக்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்ட பெண் தொழில் முனைவோர்.

    சென்னை முதல் கோவை வரை பல்வேறு நிறுவனங்களைப் பார்த்து தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் 35 பெண்கள் பங்கேற்கும் தொழில் முனைவோர் சுற்றுப் பயணம் வியாழக்கிழமை சென்னையில் தொடங்கியது.
    தமிழகத்தில் புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இடிஐஐ) முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், தொழில் சிந்தனை உருவாக்கத்துக்கான கூட்டங்கள், சவால்களை எதிர்நோக்கும் பயிற்சி என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
    இந்நிறுவனத்தின் சார்பில், பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு சுற்றுப் பயணம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் 35 பெண் தொழில்முனைவோர் இடம்பெற்றுள்ளனர்.
    சென்னையில் தொடங்கி, வேலூர், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை வரை இப்பயணக் குழுவினர் செல்கின்றனர்.
    இதுகுறித்து புத்தாக்க நிறுவன அதிகாரிகள் கூறியது: சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பெண்களிடம் அதிகம் உள்ளது. 
    ஆர்வம் இருப்பினும், அவற்றைத் தொடங்குவதற்கான வாய்ப்பு, வசதிகள், நிதியாதாரம், அனுபவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், தொழில் தொடங்க ஆர்வம் கொண்டுள்ள பெண்கள் ஏற்கெனவே தொழில் தொடங்கி சாதித்த தொழில் முனைவோரைச் சந்திப்பது, அவர்கள் நடத்தும் நிறுவனங்களைப் பார்வையிடுவது, அவர்கள் சந்தித்த அனுபவங்கள், சவால்களைத் தெரிந்து கொள்வது போன்றவை இப்பயணத் திட்டத்தில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் பெண் தொழில்முனைவோர் புதிய தொழிலை ஆர்வத்துடன் தொடங்குவதற்கான உந்து சக்தி கிடைக்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் இத்தகைய முயற்சி மேற்கொள்வது இதுவே முதன்முறை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai