சுடச்சுட

  

  பொக்லைன் இயந்திரம் மீது கார் மோதல்: சிறுவன் உள்பட இருவர் சாவு

  By DIN  |   Published on : 15th June 2018 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நின்று கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் இறந்தனர்.
  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கொம்பூதி கிராமத்தைச் சேர்ந்தவர் உடையார் (53). இவர் சென்னையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதற்காக உடையார், சூளைமேட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உடையார், தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். காரை உடையார் ஓட்டினார். கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு அருகே கரிக்காட்டுகுப்பத்திடம் செல்லும்போது, சாலையின் ஓரம் ஒரு பொக்லைன் இயந்திரம் மீது திடீரென பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.
  காரில் சிக்கி காயமடைந்தவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட, அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி காயமடைந்த உடையார், அவரது உறவினர்கள் ராசு (65), விசாலாட்சி (40), தனவள்ளி (57), சுந்தரி (45), தர்மேந்திரன் என்ற தர்மா (6),ஜனனி (13) ஆகியோர் உடனடியாக பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
  ஆனால் சிறிது நேரத்தில் ராசுவும், சிறுவன் தர்மேந்திரன் என்ற தர்மாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விபத்தின் காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai