Enable Javscript for better performance
அரசு பொது மருத்துவமனை ரூ.6 கோடியில் சீரமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரூ.6 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது.
     ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனையான ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 800 மருத்துவர்கள், 900 செவிலியர்கள், 750 உதவியாளர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலிய மாணவர்கள் என பலதரப்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
     இந்த நிலையில், மருத்துவமனையின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கவும், சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
     இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், தினமும் பல்லாயிரணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து செல்வதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
     இந்தப் பணிகளுக்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி தேவைப்படுகிறது என்று தெரிவித்து அரசுக்குப் பரிந்துரை அளித்தோம். அரசும் பரிந்துரையை ஏற்றுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai