Enable Javscript for better performance
அரசு மருத்துவர்கள் தர்ணா- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைளை மத்திய மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் போராட்டம் வலியுறுத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai