Enable Javscript for better performance
ஏப்.7-இல் சென்னை-நாகர்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல்-நாகர்கோவிலுக்கு வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி சிறப்பு கட்டண ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
     சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06007) புறப்பட்டு, ஏப்ரல் 8-ஆம் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06008) புறப்பட்டு, ஏப்ரல் 9-ஆம் காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (மார்ச் 24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai