Enable Javscript for better performance
சொத்துவரி விவகாரம்: ரூ.10 கோடி செலுத்த தனியார் ஹோட்டலுக்கு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சொத்துவரி விவகாரம்: ரூ.10 கோடி செலுத்த தனியார் ஹோட்டலுக்கு அறிவுறுத்தல்

    By  சென்னை  |   Published on : 24th March 2018 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    high_court

    சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய ரூ.24 கோடி வரி பாக்கியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹோட்டல் நிர்வாகம் முதல் கட்டமாக ரூ.10 கோடியைச் செலுத்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
     சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கிரெüன் பிளாசா ஹோட்டல் நிர்வாகம் ரூ.24 கோடியே 88 லட்சம் சொத்துவரியைச் செலுத்தவில்லை. இதனால் ஹோட்டலின் நுழைவு வாயிலில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
     இந்த நோட்டீûஸ ரத்து செய்யக் கோரியும் சொத்துவரி தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
     இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன் விசாரணக்கு வந்தது. அப்போது ஹோட்டல் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஹோட்டலில் உள்ள அறைகளின் அடிப்படையில் சொத்துவரியைக் கணக்கிடாமல், ஒட்டுமொத்த கட்டடத்தின் அடிப்படையில் வரி கணக்கிடப்பட்டுள்ளது. வரி பாக்கி தொகையில் ரூ.5 கோடி கட்டத் தயாராக இருக்கிறோம். எனவே நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
     அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத், சொத்துவரி தொடர்பான அரசாணை பிறப்பிக்கும் முன்பு ஹோட்டல் நிர்வாக சங்கத்தினரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் வழக்குரைஞர் ஆஜராகவில்லை என்றார்.
     வரி செலுத்தாததை ஏற்க முடியாது: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ""மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் மாநகராட்சி தவித்து வரும் நிலையில் சொத்துவரி செலுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது. எனவே முதல் கட்டமாக ரூ.10 கோடியைச் செலுத்த வேண்டும், தவறும்பட்சத்தில் மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். ரூ.10 கோடியைச் செலுத்த முடியுமா என ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிக்க ஹோட்டலின் சார்பில் ஆஜரான வழக்குரைஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai