Enable Javscript for better performance
தனியார் தங்கும் விடுதியில் வருமான வரித்துறை சோதனை- Dinamani

சுடச்சுட

    

    தனியார் தங்கும் விடுதியில் வருமான வரித்துறை சோதனை

    By  சென்னை  |   Published on : 24th March 2018 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
     திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள், அந்த விடுதியிலும்,, திருவல்லிக்கேணியில் உள்ள அந்த விடுதியின் உரிமையாளர் வீடு, அலுவலகம், நண்பரின் வீடு என 5 இடங்களில் சோதனை நடத்த வியாழக்கிழமை இரவுச் சென்றனர்.
     ஒரே நேரத்தில் இந்த இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கினர். இச் சோதனையின்போது ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக அங்குள்ளவர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.
     அதைத் தொடர்ந்து விடுதி உரிமையாளரின் நண்பரிடமும் ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். இதில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
     இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.
     இந்த சோதனை வெள்ளிக்கிழமை இரவும் சில இடங்களில் நீடித்தது. சோதனையில் ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர்பாகவும், வரி ஏய்ப்பு தொடர்பாகவும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai