Enable Javscript for better performance
தற்கொலைக்கு முயன்ற காவலர்களுக்கு ஜாமீன்- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலைக்கு முயன்று கைதான ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் சென்னையில் உள்ள காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை சக காவலர்கள் மீட்டனர். தேனி மாவட்ட காவல் துறை உயரதிகாரிகள் ஜாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
     இதைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த மெரீனா காவல் துறையினர் காவலர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர்களான ரகு, கணேஷ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai