Enable Javscript for better performance
பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 2012-ஆம் ஆண்டு உடற்கல்வி, இசை, கணினி, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 16, 549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ. 5, 000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
     நியமனம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு தற்போது தொகுப்பூதியமாக ரூ. 7, 700 மட்டுமே வழங்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைத்த புதிய ஊதியம் இதுவரை இந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் பேருந்து கட்டண உயர்வாலும், விலைவாசி உயர்வாலும் குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
     மேலும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒருமுறைகூட ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தொகுப்பூதியத்தில் பணி செய்தாலும், இறந்தவர்களுக்கு இழப்பீடு, 58 வயதானதால் பணி ஓய்வில் சென்றவர்களுக்கு குடும்பநலநிதி ஆகியவற்றை அரசு வழங்கியதில்லை. ஆனால் இக்கட்டான சூழ்நிலைகளில் பள்ளிகளை முழு அளவில் இயக்கிட பகுதிநேர ஆசிரியர்களை அரசு முழுவதுமாக பயன்படுத்தி வருகிறது.
     கல்வி மேம்பாட்டுக்காக 15, 000 ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்து, தில்லி சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 15, 000 ஆசிரியர்களுக்கு நிரந்தரப்பணி வழங்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் ஒப்பந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai