Enable Javscript for better performance
பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரம்:  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரம்:  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    high_court3

    காஞ்சிபுரம் மாவட்டம், பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை ஆஜர்ப்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     இதுதொடர்பாக, செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், "காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள எங்களது கருணை இல்லத்தில் தங்கியிருந்த முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
     இதையடுத்து எங்களது இல்லத்தில் தங்கியிருந்த 294 முதியவர்களை வருவாய்த் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. எனவே இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
     இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
     இதையடுத்து நீதிபதிகள், செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 27 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai