Enable Javscript for better performance
வருமான வரிக் கணக்கு தாக்கல்: மார்ச் 26 முதல் சிறப்பு ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    வருமான வரிக் கணக்கு தாக்கல்: மார்ச் 26 முதல் சிறப்பு ஏற்பாடு  

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமான வரிக் கணக்கை இதுவரை தாக்கல் செய்யாதவர்களுக்கு உதவும் வகையில், வரும் 26 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகளை வருமான வரித் துறை செய்துள்ளது. இதற்கான சேவை மையங்கள் சென்னையில் செயல்பட உள்ளன.
     இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
     வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதோர், கணக்குகளைத் தாக்கல் செய்வதை நிறுத்தியோர் குறித்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில், 2016 -17 மற்றும் 2017 -18 -ஆம் ஆண்டுகளில் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு, அதனை நினைவூட்டும் வகையில் வருமான வரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதங்களைப் பெற்றவர்கள் அதுகுறித்த விளக்கம் கேட்டும், வழிகாட்டுதல்கள் கோரியும் பதில் அளித்திருந்தனர்.
     சேவை மையங்கள்: இதையடுத்து, சுயவேலை வாய்ப்பு, ஊதியம், ஓய்வூதியம் பெறுவோர் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, எண்:121, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34' என்ற முகவரியில் உள்ள வருமான வரித் துறை தலைமை அலுவலகம், பிஎஸ்என்எல் கட்டடம், எண் 16, கிரீம்ஸ் சாலை, சென்னை - 6, எண்:130 பி, முடிச்சூர் சாலை, மேற்கு தாம்பரம், சென்னை- 45 ஆகிய இடங்களில் செயல்படும் வருமான வரி சேவை மையங்களில், வரும் 26 -ஆம் தேதி 31- ஆம் தேதி வரை, காலை 9.15 மணி முதல் மாலை 5.45 மணி வரை வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044 -2833 8014, 2833 8314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai