Enable Javscript for better performance
ஏப்.4-இல் குட்டை மரங்கள் வளர்ப்பு பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், போன்சாய் (குட்டை மரங்கள்) வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி ஏப்ரல் 4-ஆம் தேதி அண்ணா நகரில் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து அதன் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணா நகரில் செயல்படும் மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
    அந்த வகையில், போன்சாய் (குட்டை மரங்கள்) வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி புதன்கிழமை (ஏப்ரல் 4) நடைபெறவுள்ளது. இந்த ஒரு நாள் பயிற்சிக்கு கட்டணம் ரூ.600 ஆகும்.
    மாடித் தோட்டம் பயிற்சி: அதேபோல், மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பான பயிற்சி வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறுகிறது. இந்த பயிற்சியானது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள்,தொழில் முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இந்த ஒரு நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.600.
    இந்த பயிற்சி வகுப்புகள் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும். பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 
    இந்த பயிற்சியில் கலந்துக் கொள்ள விரும்புவோர் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். 
    கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணா நகர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai