Enable Javscript for better performance
கடையை உடைத்து ரூ.50 லட்சம் கடிகாரங்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தாம்பரத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் கடையை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    இதுகுறித்து சேலையூர் காவல் நிலையப் போலீஸார் கூறியது:
    ராஜகீழ்பாக்கம் மேத்தா நகர் அகநானூறு தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ரமேஷ் மனைவி வீணா ரமேஷ் (49). இவர் தாம்பரம் வேளச்சேரி சாலையில் கைக்கடிகார விற்பனைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க அவர் சென்றபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியன காணாமல் போயிருந்தன. சேலையூர் போலீஸார் வழக்குப் பதிந்து இத்திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai