Enable Javscript for better performance
கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம்: சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம்: சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 31st March 2018 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் ஆக்கிரமிப்புப் பகுதிகளை சீல் வைத்து மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இது தொடர்பாக பம்மலைச் சேர்ந்த கலாதேவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-பம்மல் அம்பேத்கர் நகரில் எனது வீட்டின் அருகே கால்வாய் உள்ளது. 
    மழைக்காலத்தில் இந்த கால்வாய் மூலம்தான் மழைநீர் வெளியேறும். இந்த நிலையில், கால்வாயை ஆக்கிரமித்து கிளாஸ்டின் டேவிட் என்பவர் கட்டடம் கட்டியுள்ளார். அதாவது கால்வாய் மீது நடைப் பாலம் ஒன்றைக் கட்டி அதன் மீது கட்டடத்தைக் கட்டியுள்ளார். இதனால், கால்வாயின் அளவு குறைந்து அந்த பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்க்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இது குறித்து பம்மல் நகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
    இதையடுத்து, சிவில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு பகுதியை இடிக்க உத்தரவிட்டது. 
    ஆனால், எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே, கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
    இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் எல்.தாமோதரன், தீனதயாளன் ஆகியோர் ஆஜராகினர். 
    மனுவை விசாரித்த நீதிபதி, கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ள கட்டடப் பகுதியை சீல்வைக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதிக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் பம்மல் நகராட்சி ஆணையர் மற்றும் பகுதி மின்வாரிய பொறியாளருக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10-ஆம்தேதிக்குத் தள்ளிவைத்தனர். 
    அப்போது, கிளாஸ்டின் டேவில் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai