Enable Javscript for better performance
கொரட்டூர், மண்ணூர்பேட்டை உதவி செயற் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கொரட்டூர், மண்ணூர்பேட்டை உதவி செயற் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

    By DIN  |   Published on : 31st March 2018 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை கொரட்டூர், மண்ணூர்பேட்டை பிரிவு உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கொரட்டூர் மின்நிலைய அலுவலகக் கட்டட வளாகத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மண்ணூர்பேட்டை மற்றும் கொரட்டூர் பிரிவு அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள 33/11 கி.வோ. டிஎன்எச்பி கொரட்டூர் மின் நிலைய அலுவலகக் கட்டிட வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.
    சனிக்கிழமை முதல் (மார்ச் 31), 33/11 கி.வோ. டிஎன்எச்பி கொரட்டூர் மின் நிலையம், இரயில்வே ஸ்டேஷன் ரோடு, கொரட்டூர், சென்னை -80 என்ற விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் இவ்விரு அலுவலகங்களும் செயல்படும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai