Enable Javscript for better performance
சிறை வார்டனிடம் வழிப்பறி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை, கோயம்பேட்டில் சிறை வார்டனிடம் வழிப்பறி செய்த வர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
    சென்னை அருகே உள்ள புழல் சிறைக் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருபாகரன் (32). இவர் புழல் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். கிருபாகரன், மாமல்லபுத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து வியாழக்கிழமை இரவு பேருந்து மூலம் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வந்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியே 100 அடி சாலையில் கிருபாகரன் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கிருபாகரன் கையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கிருபாகரன், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai