Enable Javscript for better performance
திருவள்ளூர் அருகே அரிய வகை ஆந்தை- Dinamani

சுடச்சுட

    
    owl

    சத்தரை பகுதியில் பிடிபட்ட அரிய வகை ஆஸ்ரேலியா ஆந்தை.

    திருவள்ளூர் அருகே வயல்வெளியில் வெள்ளிக்கிழமை பிடிபட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை ஆந்தையை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். 
    திருவள்ளூர் அருகே சத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜ்(28). இவர் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் அருகே உள்ள நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்றாராம். அப்போது, டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்கள் மின்னிய நிலையில் அரிய வகை ஆந்தை ஒன்று வரப்பில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவரை பார்த்தும் அப்பறவை பறந்து செல்லாமல் அப்படியே இருந்ததாம். உடனே இவர் ஆந்தையைப் பிடித்து தன் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து ஆந்தையை பார்வையிட்டனர். 
    இதுகுறித்து விவசாயி ராஜ் கூறுகையில், தற்போது நெல் வயல் பசுமையாகவும், தண்ணீர் நிறைந்தும் இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இங்கு வருகின்றன. அதேபோல், இப்பறவையும் இரை தேடி வந்திருக்கலாம் என தெரிகிறது. இது அரிய வகை ஆந்தை என்பதால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அதிகாரிகள் வந்ததும் ஆந்தையை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai