Enable Javscript for better performance
பங்குனி உத்திர திருவிழா: திருவொற்றியூர், எண்ணூரில் பால்குடம், காவடி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திர திருவிழா: திருவொற்றியூர், எண்ணூரில் பால்குடம், காவடி ஊர்வலம்

    By DIN  |   Published on : 31st March 2018 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    milk

    எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்புபி பகுதியில் பால்குடம் எடுத்துச் சென்ற பெண் பக்தர்கள்.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை பால்குடம், காவடி எடுத்துச் சென்று காணிக்கை செலுத்தினர்.
    திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் ஜோதிநகர், சரஸ்வதி நகர், எல்லையம்மன் கோயில், மின்வாரிய குடியிருப்பு உள்ளிட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் முருகன் கோயில்கள் உள்ளன. பங்குனி உத்திரத்தையொட்டி இக்கோயில்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
    ஜோதிநகர் முருகன் கோயில் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் திரண்டு சூரியனை வழிபட்டு பின்னர் பால்குடம், காவடிகளை ஏந்தி ஊர்வலம் புறப்பட்டனர். இதில் பலர் அலகு குத்திச் சென்றனர்.
    இதேபோல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள முருகன் கோயிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சலாடை அணிந்து பால்குடம் எடுத்து வந்தனர். திருவொற்றியூர் தேரடி அருகே உள்ள எல்லையம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஜாத்திரை திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு படையல் செய்தனர். விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவொற்றியூர், எண்ணூர், சாத்தாங்காடு காவல் நிலைய போலீஸார் செய்திருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai