Enable Javscript for better performance
பள்ளிகள் தரம் உயர்த்தல்: தகுதிப் பட்டியலை அனுப்ப உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகள் தரம் உயர்த்தல்: தகுதிப் பட்டியலை அனுப்ப உத்தரவு

    By DIN  |   Published on : 31st March 2018 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, அவற்றுக்கான தகுதிப் பட்டியலை அனுப்ப, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
    வரும் கல்வியாண்டில், 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 
    நடுநிலைப் பள்ளிகளைப் பொருத்தவரை, தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தொடக்க கல்வி இயக்ககத்துடன் இணைந்து, மாவட்டவாரியாக தகுதி வாய்ந்த பள்ளிகளின் பட்டியலை தயாரிக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
    தரம் உயர்த்தப்பட உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு 3 ஏக்கர் நிலம் இருப்பது அவசியம். புறம்போக்கு, தானமாக வழங்கப்பட உள்ள நிலங்களை, கணக்கு காட்ட இயலாது. கழிவறை, குடிநீர் உள்ளிட்ட உரிய கட்டமைப்பு வசதி கொண்ட பள்ளிகளையே தரம் உயர்த்த பரிந்துரைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர். இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai