Enable Javscript for better performance
போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பண மோசடி: பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பண மோசடி: பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை திருவான்மியூர் அருகே போலி ஏடிஎம் கார்டு தயாரித்து வாடிக்கையாளர்களின் பணத்தை முறைகேடாக அபகரித்ததாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது: 
    சென்னை கொட்டிவாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், மாதவரம் அன்னபூர்ணா நகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி (30), அவரது உறவினர் ஜெயராமன்(32) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 வாரகாலமாக இவர்கள் பயன்படுத்தும் ஏடிஎம் ஸ்வைப்பிங் 
    மெஷினிலிருந்து வாடிக்கையாளர்களின் பணம் எடுக்கப்படுவதாகப் புகார்கள் வந்தன. 
    இதையடுத்து பங்க்கின் மேலாளர் பாலவாக்கம் ராஜசேகர்(30) இவர்களை கண்காணித்ததில் இருவரும் பயன்படுத்தும் ஏடிஎம் ஸ்வைப்பிங் மெஷினிலிருந்து பணம் திருடப்படுவதை உறுதி செய்தார். பின்னர் வெள்ளிக்கிழமை கணேசமூர்த்தி, ஜெயராமனை அழைத்து விசாரித்தபோது அவர்கள் ராஜசேகரை தாக்கிவிட்டு தப்பி விட்டனர். 
    இதுதொடர்பாக, அவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    அதன்பேரில், அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 'ஸ்கிம்மர்' கருவியை பெட்ரோல் பங்க் ஏடிஎம் மெஷினில் பயன்படுத்தி அதிலிருந்து வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டை எண், ரகசிய எண் உள்ளிட்டவற்றை அறிந்து, போலி ஏடிஎம் கார்டு தயாரித்து ஆன்-லைன் மற்றும் மெஷின் மூலம் பல லட்சம் பணத்தை மோசடியாக எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai