Enable Javscript for better performance
ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    


    மடிப்பாக்கத்தில் நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பி, பாட்டிலால் குத்திக் கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திரிசூலம், இலுப்பைத் தோப்புதெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (23). கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மடிப்பாக்கம், சுப்பிரமணி நகரில், மூவரசன்பேட்டை ஏரி அருகே நடந்து சென்றார். அப்போது சிலர் சுரேஷை இரும்பு கம்பியாலும், பாட்டிலாலும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் புதன்கிழமை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 
    மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
    விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த ராமு (எ) ராமச்சந்திரன் முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து சுரேஷை தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து தலைமறைவாக இருந்த மூவரசன்பேட்டை ராமு (எ) ராமச்சந்திரன் (27), கீழ்கட்டளை திலீப் (23), பழைய பல்லாவரம் சுடலைராஜா (26), கலைமணி (23), மடிப்பாக்கம் அஜித்குமார் (24) ஆகிய 5 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai