Enable Javscript for better performance
இருசக்கர வாகன திருட்டில் 4 பேர் கைது: கார் உள்பட 20 வாகனங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    இருசக்கர வாகன திருட்டில் 4 பேர் கைது: கார் உள்பட 20 வாகனங்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 18th May 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்ணா நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சென்னை அமைந்தகரை, பொன்னுவேல் பிள்ளைதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (38). இவர் புதன்கிழமை அண்ணாநகர் முதல் அவென்யூவில் நடந்து சென்றபோது 4 பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி, கையில் வைத்திருந்த ரூ.250 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
    இதுகுறித்து வழக்குப் பதிந்த அண்ணாநகர் போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அண்ணாநகர் அருகே வாகனச் சோதனையின்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வேகமாக வந்த 4 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாண்டியனை வழிமறித்து செல்லிடப்பேசியையும், பணத்தையும் பறித்துச் சென்றது இவர்கள் என்பது தெரியவந்தது. அத்துடன் இவர்கள் 4 பேரும் அண்ணா நகர், அமைந்தகரை பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
    இதைத் தொடர்ந்து பிடிபட்ட கொளத்தூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (23), செம்பியத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (21), பிரசாந்த் (22), அகரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (22) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 19 இருசக்கர வாகனங்கள், ஒரு கார், ஒரு செல்லிடப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai