Enable Javscript for better performance
இரு சக்கர வாகனத்தின் மீது மோதி நகையைப் பறிக்க முயற்சி: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இரு சக்கர வாகனத்தின் மீது மோதி நகையைப் பறிக்க முயற்சி: 2 பேர் கைது

    By DIN  |   Published on : 18th May 2018 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிந்தாதிரிபேட்டையில், கணவன்-மனைவி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி, நகையைப் பறிக்க முயன்ற இரு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
    சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன்-மனைவி மீது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் மோதினர். அப்போது நிலைதடுமாறிபோது அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை இரு இளைஞர்களும் பறிக்க முயன்றனர். இதைப் பார்த்த அருகில் இருந்தோர் உடனடியாக அந்த இரு இளைஞர்களையும் பிடித்தனர். பிடிபட்ட இருவரும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    விசாரணையில் அவர்கள் இருவரும் சென்னை, ஐஸ் ஹவுஸ் செல்லம்மாள் தோட்டத்தைச் சேர்ந்த அன்பரசு (23), ராஜேஷ் (19) எனத் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai