Enable Javscript for better performance
காணாமல் போன காவலரின் வாக்கி-டாக்கி: போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில், காவலர் ஒருவரின் வாக்கி-டாக்கி காணாமல் போனதாக மெரீனா காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் அணியில், பொறுப்பு ஆய்வாளராக இருந்து வருபவர் மயில்வாகனன். இவர் டிஜிபி அலுவலக பாதுகாப்பு பொறுப்பை கடந்த 11 -ஆம் தேதி ஏற்றிருந்தார். மறுநாள் காலை அனைத்து பொருள்களும் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்தபோது, ஒரு காவலரின் வாக்கி-டாக்கி குறைவாக இருந்தது. 
    அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலில் பணிபுரிந்த காவலர் பயன்படுத்திய அந்த வாக்கி-டாக்கி குறித்து தொடர்புடைய காவலரிடம் கேட்டபோது, தான் ஒப்படைத்துச் சென்றதாக கூறினாராம். 
    இதையடுத்து, காணாமல் போன வாக்கி -டாக்கியை கண்டுபிடித்து தருமாறு மயில்வாகனன் மெரீனா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai