Enable Javscript for better performance
குரூப் -1 தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    குரூப் -1 தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்: மு.க.ஸ்டாலின் 

    By DIN  |   Published on : 18th May 2018 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குரூப்-1 தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றிருப்பதும், இந்த மோசடி மூலம் தனியார் பயிற்சி மையத்திலிருந்து தேர்வு எழுதியவர்கள் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதவிகளில் தேர்வாகி இருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள செய்திகளும் அதிர்ச்சியை அளிக்கின்றன. 
    இந்தத் தேர்வில் இமாலய முறைகேடு செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமலும், கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு முன் ஜாமீன் கொடுப்பதற்கு உதவியாகவும் சென்னை மாநகரக் காவல்துறையும், முதல்வர் எடப்பாடி 
    பழனிசாமியும் செயல்பட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
    எனவே, சென்னை மாநகரக் காவல் துறையிடமிருந்து இந்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai