Enable Javscript for better performance
சிட்லப்பாக்கத்தில் 40 சவரன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    சிட்லப்பாக்கம் ராம்பக்சி நகரில் வசித்து வருபவர் முரளி, தனியார் நிறுவன ஊழியர். இவர் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் உறவினர் வீட்டுச் சென்றார். இந்நிலையில், வியாழக்கிழமை அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai