Enable Javscript for better performance
தலைமைச் செயலக வளாகத்தில் அனுமதி பெறாத கடைகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை தலைமைச் செயலக வளாகத்துக்குள் அனுமதி பெறாத கடைகள் அகற்றப்பட்டன. இதனால், அங்கு வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டைக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலக வளாகத்துக்குள் அனுமதி பெற்று சுமார் 7 உணவகங்கள் வரை இயங்குகின்றன. இதைத்தொடர்ந்து, நடைபாதைகளில் ஏராளமான அனுமதி பெறாத பெட்டிக் கடைகள் பல ஆண்டுகளாக இயங்கி வந்தன. காய்கறிகள், பழங்கள் முதல் அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
    இந்த நிலையில், இந்தக் கடைகள் அனைத்தும் திடீரென அகற்றப்பட்டன. இதனால், தலைமைச் செயலகத்துக்குள் எளிதாக வந்து வாகனங்களை நிறுத்த முடிவதாகவும், நெரிசலும் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். திடீரென முளைக்கும் பெட்டிக்கடைகளுக்கு அனுமதி தரக்கூடாது எனவும், அனுமதி பெற்ற பிறகே உரிய இடங்களில் கடைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai