Enable Javscript for better performance
தலைமை தபால் நிலையத்தில் இன்று 'பாரம்பரிய இடங்கள்' கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    தலைமை தபால் நிலையத்தில் இன்று 'பாரம்பரிய இடங்கள்' கண்காட்சி

    By DIN  |   Published on : 18th May 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக அருங்காட்சியக தினத்தையொட்டி (மே 18), சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் 'பாரம்பரிய இடங்கள்' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை கண்காட்சி நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    சென்னையில் உள்ள தென்னிந்திய தபால்தலை சேகரிப்பு சங்கத்துடன் இணைந்து இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. அறிவித்த பாரம்பரிய இடங்கள் குறித்து பிரபல தபால்தலை சேகரிப்பாளர் ஆர்.சீத்தாராமன் தொகுப்பிலிருந்து பல்வேறு தபால்தலைகள் இதில் இடம்பெறுகின்றன. பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களும் இடம்பெறும். ரம்ஜான் புனித மாதத்தை குறிக்கும் வகையில், எச்.சாகுல் சேகரித்த மசூதிகள் தபால் தலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகளுக்கென குறும் படங்கள் திரையிடப்படுகின்றன.
    அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில், முதலாவது மின்சார திரையரங்கம் இருந்த வரலாற்றுப் பாரம்பரியக் கட்டடத்தில் நிரந்தர தபால்தலை கண்காட்சி 2017 ஆகஸ்ட் 15 -ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்திய தேசிய இயக்கம் மற்றும் சுதந்திர இந்தியா, அஞ்சல் தகவல் தொடர்பு, குழந்தைகள் சிறப்பு காட்சி, இசை, மகளிர் மற்றும் மகளிர் மேம்பாடு ஆகிய ஐந்து தலைப்புகளில் இதுவரை கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சிகள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றன. பொதுமக்கள் மட்டுமன்றி நகர பள்ளிகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கண்காட்சியை பார்த்துச் சென்றனர். இதனை அனைத்து வேலைநாள்களிலும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai