Enable Javscript for better performance
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி

    By DIN  |   Published on : 18th May 2018 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி பெற மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். 
    இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பள்ளிக் கல்வித் துறை மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
    பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொடர்பு தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு விருப்பக் கடிதத்தை, ''மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை -600006'' என்ற முகவரிக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
    பயிற்சி நடக்கும் இடம் மற்றும் காலம் குறித்த தகவல்கள், சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்பும் பார்வையற்றோர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai