Enable Javscript for better performance
போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் பணம், நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை, திருவொற்றியூரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.24 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவொற்றியூர், கிராமத் தெருவை சேர்ந்த வெள்ளைத்துரை என்பவர், மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். 
    இவரது மனைவி கவிதா (32). இவர் தனது மகன் கபிலை அழைத்துக் கொண்டு தண்டையார்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவில் வசிக்கும் தனது சகோதரர் முருகராஜ் வீட்டுக்கு புதன்கிழமை சென்றார். முருகராஜ் மனைவி செல்வி, ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது இருசக்கர வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருந்தார். 
    அந்த வாகனத்தில் தனது மகன் கபிலை அமர வைத்துக் கொண்டு, கவிதா தண்டையார்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள ரெப்கோ வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் தனது நகைகள் சிலவற்றை அடமானம் வைத்து ரூ.1.24 லட்சம் ரொக்கத்தைப் பெற்றுக் கொண்டு, அதனை இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். அதனுடன் 10 கிராம் எடையில் 4 மோதிரங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் வைத்துள்ளார்.
    அதைத் தொடர்ந்து அவர், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு, மகனுடன் சென்றுள்ளார். பணம் எடுத்துக் கொண்டு திரும்பியபோது, இருசக்கர வாகன இருக்கை பெட்டி திறந்து கிடந்ததையும், அதில் இருந்த நகைகள், ரொக்கப் பணம், பாஸ்போர்ட் ஆகியன காணாமல் போயிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai