Enable Javscript for better performance
மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் சாவு: கணவர், பேத்தி படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் சாவு: கணவர், பேத்தி படுகாயம்

    By DIN  |   Published on : 18th May 2018 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே வீட்டின் முதல்மாடி பால்கனியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர், பேத்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
    அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகேயுள்ள முகப்பேர் கர்ணன் தெருவில் வசிப்பவர் நடராஜன் (53). இவர் பால், பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (48). இவரும் பூ வியாபாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை மாலை நடராஜனும், லட்சுமியும் வீட்டின் முதல்தளத்தில் உள்ள பால்கனியில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தனர். இவர்களுடன் பேத்தி லட்சனா அமர்ந்திருந்தார்.
    திடீரென பால்கனியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், நடராஜன், லட்சுமி, லட்சனா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். 
    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளை சரி செய்தனர். இதில் லட்சுமி தலையில் அடிபட்டு உயிரிழந்தார். 
    படுகாயமடைந்த நடராஜனும், அவரது பேத்தி லட்சனாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த விபத்தின்போது, முகப்பேர் மேற்கு 3 -ஆவது பிளாக்கில் வசித்துவரும் மகேஷ் (24) என்பவர் அப்பகுதியை இருசக்கர வாகனத்தில் கடந்தார். அப்போது அவர் மீதும் கட்டட இடிபாடுகள் விழுந்தன. இதில் பலத்த காயமடைந்த மகேஷும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 
    நொளம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, வீட்டின் உரிமையாளர் உதயகுமாரிடம் (54) விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai