Enable Javscript for better performance
மே 20-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கான இலவச கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கான இலவச கருத்தரங்கம் சென்னை அண்ணாநகரில் உள்ள கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் மே 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கிங் மேக்கர்ஸ் அகாதெமியில் 2018-2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் மே 27, ஜூன் 17 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளன. இதையொட்டி, மே 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருமான வரித் துறை இணை ஆணையர் நந்தகுமார், ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றவுள்ளனர். அப்போது தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த அனைத்து வழிமுறைகளையும் அளிக்கவுள்ளனர். 
    இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், அறிவாற்றலின் அடிப்படையில் முதல் மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தங்களது பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai