முதல்வர் பதவி விலகத் தேவையில்லை

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகத் தேவையில்லை என
முதல்வர் பதவி விலகத் தேவையில்லை

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகத் தேவையில்லை என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
 ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 இலங்கை அரசால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து விட்டன.
 இதற்காக தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இலங்கை அரசு தகுந்த நஷ்டஈடு வழங்கிட வேண்டும். இல்லையேல் இந்திய அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
 இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரம் இலங்கையில் வெகுவாகப் பாதிக்கப்படுவதால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 சபரிமலை கோயிலில் மட்டும்தான் பெண்கள் நுழைய தடை இருக்கிறது. மற்ற ஐயப்பன் கோயில்களில் இத்தடை இல்லை. இறைவனை வழிபடும் உரிமையை யாரும் மறுக்கக் கூடாது.
 முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 மாநில சுயாட்சி வேண்டும் எனக் கூறும் திமுக, மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் எனக் கேட்பதே அக் கோரிக்கைக்கு எதிரானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம்.
 இதற்காக யாரும் பதவி விலகத் தேவையில்லை. நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதே தவிர குற்றச்சாட்டுக்கு தண்டனை விதிக்கவில்லை. எனவே தமிழக முதல்வர் பதவி விலகத் தேவையில்லை.
 தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள், மாணவர் சேர்க்கை ஆகியனவற்றில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. உயர்கல்வித் துறையில் ஊழல் மலிந்திருக்கிறது.
 இந்த ஊழலை ஒழிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியன முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com