பொதுமக்கள் சாலையில் உருண்டு போராட்டம்

வண்டலூரை அடுத்த நல்லம்பாக்கம், ஊனைமாஞ்சேரி கிராமங்களில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மண்
மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.


வண்டலூரை அடுத்த நல்லம்பாக்கம், ஊனைமாஞ்சேரி கிராமங்களில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மண் சாலையில் உருண்டு அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர், ஊரப்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் வரை சுமார் 14 கி.மீ. சாலை மாநில ஊரக நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 
இந்த சாலையை காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம், கல்வாய், நல்லம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையின் நடுவில் காட்டூரில் இருந்து அருங்கால் வரை சுமார் 700 மீட்டர் சாலையும், நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி வரை சுமார் 2 கி.மீ. தூரம் சாலை வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. 
விடுபட்ட இருபகுதிகளிலும் தார்ச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், மாநில ஊரக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்காமல் உள்ளனர். குண்டும், குழியுமாக இருக்கும் சாலையில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையா, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கியும் இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், போக்குவரத்து வசதியின்றி குண்டும் குழியுமாக உள்ள சாலையை தார்ச் சாலையாக மேம்படுத்தித் தரக்கோரி சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com