சென்னை கோயம்பேட்டில் கஞ்சா வைத்திருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே போலீஸார் புதன்கிழமை அதிகாலை ரோந்து வந்தபோது சந்தேகம்படும்படியாக இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீஸாரைப் பார்த்தும், இருவரும் தப்பியோடினர்.
அதில் ஒருவரைப் பிடித்து விசாரித்ததில் கேரள மாநிலம் எர்ணாகுளம் குன்னம்புராதா பகுதியைச் சேர்ந்த நூருதீன் மகன் நஜூமோன் (20) என்பதும், புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
அவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நஜூமோனை கைது செய்தனர். நஜூமோனிடம் கஞ்சாவை கொடுத்துவிட்டு தப்பியோடிய, சென்னை அமைந்தகரை எம்.எம். காலனி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ரா.விக்கி என்ற விக்னேஷ் (26) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


