ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சென்னை ஐஐடி-யில்  இணைய அறிவியல் கருத்தரங்கம்

இரண்டு நாள் இணைய அறிவியல் கருத்தரங்கம் சென்னை ஐஐடி-யில் திங்கள்கிழமை தொடங்கியது. பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான

Updated On :26 பிப்ரவரி 2019, 4:15 am IST


இரண்டு நாள் இணைய அறிவியல் கருத்தரங்கம் சென்னை ஐஐடி-யில் திங்கள்கிழமை தொடங்கியது. பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான இணைய அறிவியல் அறக்கட்டளையும், சென்னை ஐஐடி-யும் இணைந்து இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இணைய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டங்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகத் தரத்திலான ஆய்வகங்கள் உதவும் வகையில், சர்வதேச தொடர்பை ஏற்படுத்தும் பணியை இந்த இணைய அறிவியல் அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்தக் கருத்தரங்கு மூலம், இந்திய இணைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள், சந்தேகங்களை பரிமாறிக் கொள்ளுதல், கூட்டு ஆராய்ச்சி போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதனையொட்டி தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் போஸ்ச் மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.