தேசிய கடல்சார் பல்கலை. நுழைவுத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st April 2019 04:24 AM | Last Updated : 01st April 2019 04:24 AM | அ+அ அ- |

தேசிய கடல்சார் பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு திங்கள்கிழமை (ஏப்ரல் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடல்சார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப் பல்கலைக்கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் 23 கல்லூரிகளில் கடல்சார் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.இவற்றில் சேருவதற்கு "எம்யூசெட்' எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அதன்படி வரும் நிதியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்குகின்றன. நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.imu.edu.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.