"பாரம்பரிய முறைகளே ஆட்டிஸம் பிரச்னைக்கான அருமருந்து'
By DIN | Published On : 01st April 2019 04:27 AM | Last Updated : 01st April 2019 04:27 AM | அ+அ அ- |

இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட பாரம்பரிய முறைகளே ஆட்டிஸம் பிரச்னைக்கான அருமருந்து என ஆட்டிஸம் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
"புத்தி' சிகிச்சை மையம் சார்பாக உலக ஆட்டிஸம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தலைப்புகளின்கீழ் சிறப்பு மருத்துவ அமர்வு சென்னையில் நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மன உளவியல் ஆலோசகர்கள், ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஆட்டிஸம் குறித்த ஹிந்தி மொழியாக்க பதிப்பு வெளியிடப்பட்டது.
இதில், "புத்தி' சிகிச்சை மைய நிறுவனர் என்ன படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி பேசியது:
ஆட்டிஸம் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயாளியாகக் கருத அவசியமில்லை. அவர்களுக்குத் திறமையோ தகுதியோ இல்லை என நினைப்பது தவறு. ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கென தனித்துவமான திறன்கள் உள்ளன. இதனைப் பல்வேறு நுண்ணறிவுப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் கண்டறிய முடியும். ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளும் நம்மைப்போல் சாதாரணமாக இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்களது உலகத்தைப் புரிந்து அதற்கேற்ற சூழலை உருவாக்குவதன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும்.
இதற்கென நவீன தொழில்நுட்ப மருத்துவ வசதிகள் உள்ளன. மூளை செயல்பாடுகளைத் தூண்டும் நவீன சிகிச்சை (ஆழ்ஹண்ய் ள்ற்ண்ம்ன்ப்ஹற்ங்க் ற்ங்ஸ்ரீட்ய்ண்வ்ன்ங்), மனம் மற்றும் உடலை மேம்படுத்துவதற்கான நவீன சிகிச்சை (ஈண்ழ்ங்ஸ்ரீற் ஸ்ரீன்ழ்ழ்ங்ய்ற் ள்ற்ண்ம்ன்ப்ஹற்ங்க் ற்ங்ஸ்ரீட்ய்ண்வ்ன்ங்) ஆகியவற்றை நாங்கள் மேற்கொள்கிறோம்.
இதைத் தவிர இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட பாரம்பரிய முறைகளே ஆட்டிஸம் பிரச்னைக்கான அருமருந்து. இதற்கு தகுந்த விழிப்புணர்வு தேவை என்றார் அவர்.