சுடச்சுட

  

   நிகழாண்டில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு  இதுவரை 772 பேர் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.
  மேலும், மாநிலம் முழுவதும் 344 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 1,103 பேர் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மாநில வாரியாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் தொடர்பான மத்திய சுகாதாரத் துறை தரவுகளை ஆய்வு செய்த போது, நிகழாண்டில் மட்டும் நாடு முழுவதும் அந்த காய்ச்சலுக்கு 772 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
  ராஜஸ்தானில்தான் அதிகபட்சமாக பன்றிக் காய்ச்சலுக்கு 190  பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 136 பேர் அக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
  தமிழகத்தைப் பொருத்தவரை மார்ச் 30-ஆம் தேதி வரை 334 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai