மு.க.ஸ்டாலினுக்கு திட்டங்களைப் பற்றி தெரியாது : அன்புமணி ராமதாஸ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் திட்டத்தான் தெரியும், திட்டங்களைப் பற்றித் தெரியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சென்னை சூளைமேட்டில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி. 
சென்னை சூளைமேட்டில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி. 


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் திட்டத்தான் தெரியும், திட்டங்களைப் பற்றித் தெரியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து சூளைமேட்டில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பெரும் பணக்காரர்.  மத்திய சென்னையில் காலி குடங்களோடு நிற்கும் பெண்களைப்  பார்த்ததாக அவர் பேசியுள்ளார். 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக அவர் இருந்துள்ளார். அப்போது குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருந்தால், காலி குடங்களோடு யாரும் நின்றிருக்க மாட்டார்கள்.
நல்லத் திட்டங்களை மக்களுக்குக் கொடுக்க மட்டுமே அதிமுக அணியில் உள்ள கட்சிகளுக்குத் தெரியும். ஆனால், மு.க.ஸ்டாலினுக்குத் திட்ட மட்டுமே தெரிகிறது. நல்ல திட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தனிநபர் விமர்சனத்தில்தான் அதிகம் ஈடுபடுகிறார். அதிமுகவை விட பாமக மீது இப்போது அதிக விமர்சனம் செய்கிறார். திமுகவுடன் கூட்டணி வைக்க பாமகவை அழைத்தனர். பாமக செல்லவில்லை. அதனால், பாமகவை ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்கிறார். 
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. கோதாவரி ஆற்றில் 3 ஆயிரம் டிஎம்சி நீர் உள்ளது. இதில், 1,500 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது.  இதில், ஆயிரம் டிஎம்சி நீரை காவிரி ஆற்றில் திருப்பிவிடும் திட்டம் இது. இதன் மூலம் தமிழகத்துக்கு 200 டிஎம்சி நீர் கிடைக்கும். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீர்தான் கிடைக்கிறது. இந்தத் திட்டத்துக்காக ரூ.65 
ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது மட்டும் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ்.  அப்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறது திமுக  என்றார்.  சாம்பாலை ஆதரித்து  மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com