வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் மீது குற்றவியல் நடவடிக்கை: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை மனு


வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை மனு அளித்துள்ளது. 
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், அதிமுக வழக்குரைஞர்கள் குழுவினர் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் இல்லம், அலுவலகம், கல்லூரி முதலிய இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளாகக் காணப்படுகின்றன.
சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தின் வரிசை எண்ணைக் கொண்டு அறிவியல்பூர்வமாக அந்த ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து யார் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன, வங்கியின் கருவூலத்தில் இருந்து எந்த வங்கிக்கணக்கில் எடுத்துச் செல்லப்பட்டது என்ற விவரத்தை விசாரணை செய்ய வேண்டும். மேலும், பணம் பதுக்கலில் தொடர்புடைய துரைமுருகன், அவரது மகனும் வேலூர் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதி: இதேபோன்று, மத்திய சென்னைத் தொகுதியில் தனியார் தொலைக்காட்சி வாகனத்தின் மூலமாக திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்களிக்கக் கோரி பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அதிமுக புகார் மனு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com