100 % வாக்களிப்பு: விழிப்புணர்வு பிரசாரம்
By DIN | Published On : 04th April 2019 04:29 AM | Last Updated : 04th April 2019 04:29 AM | அ+அ அ- |

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பிரசாரம், பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனாகுமாரி தலைமை வகித்தார். மாணவர்கள், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரத்தை நடத்தினர்.
மேலும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அண்ணா நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.