போலி வருமான வரித்துறை அதிகாரிகள் விவகாரம்: பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து, சென்னை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஆர்.இளவரசி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பொதுமக்களிடம் நடித்து, அவர்களின் பொருள்களைக் கொள்ளையடித்து செல்லும் மர்ம நபர்கள் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருவதைப் பார்க்க முடிகிறது. துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்குச் செல்கின்றனர். 
அவ்வாறு பொதுமக்களை அணுகும்போது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்படும்பட்சத்தில், வந்திருப்பவர்களிடம் துறை சார்ந்த அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி கேட்கலாம். இதன் மூலம், வந்திருக்கும் நபர்கள் வருமானவரித்துறையைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அந்த அடையாள அட்டையில், அடையாள அட்டை வழங்கும் அதிகாரியின் கையெழுத்தும், பதவியும் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் இணை ஆணையர் எம்.முரளிமோகன்- 89859 70413 , வருமான வரி அலுவலர் டி.என். குருபிரசாத்- 94459 53544  ஆகியோரை செல்லிடப்பேசி எண்களில்  தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் போலி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com