தண்டவாள பராமரிப்பு பணி: 45 மின்சார ரயில்கள் ரத்து

தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், அரக்கோணம் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) 45 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணி: 45 மின்சார ரயில்கள் ரத்து

தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், அரக்கோணம் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) 45 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 சென்னை மூர்மார்க்கெட் வளாகம் மற்றும் வில்லிவாக்கம் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) நடக்கவுள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் பகுதி, திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணம் செல்லும் 24 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
 இதேபோல, மறுமார்க்கமாக ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் பகுதி, திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணத்தில் இருந்து சென்னை மூர்மார்க்கெட் வளாகம் வரவேண்டிய 18 மின்சார ரயில்களும், கடற்கரைக்கு வர வேண்டிய 3 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதுதவிர, சில ரயில்களின் சேவை ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
 சிறப்பு ரயில்கள்: ஆவடியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு மதியம் 1.50 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு முற்பகல் 11.55, மதியம் 1.50, 2.25 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1.15 மணிக்கும், திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 8.50, 9.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
 இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com