Enable Javscript for better performance
பறக்கும் படை நடவடிக்கை: தேர்தல் ஆணையத்தில் நிஜாமுதீன் மனு- Dinamani

சுடச்சுட

    

    பறக்கும் படை நடவடிக்கை: தேர்தல் ஆணையத்தில் நிஜாமுதீன் மனு

    By DIN  |   Published on : 11th April 2019 04:32 AM  |   அ+அ அ-   |    |  


    மக்களவைத் தேர்தலையொட்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, பாமர மக்கள் ஆகியோரிடம் பணம், நகை பறிமுதல் செய்யப்படுவது குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
    வாக்குக்காக பணம் கொடுக்கப்படுவதைத் தடுப்பதற்காக பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடைய செயல்பாடுகள் பல நேரங்களில் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.  கடந்த மாத இறுதியில் வேதாரண்யம் கோயிலுக்கு சிங்கப்பூரிலிருந்து வந்த சுற்றுலாப் பயணியிடம் சோதனையிட்டு தக்க ஆவணமில்லை என்று அவரிடமிருந்து 3,200 சிங்கப்பூர் டாலர் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டது.  இந்தத் தொகை பின்னர் சுங்கத்துறையிடம் ஆலோசனை பெறப்பட்டு அமலாக்கப் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக அறிகிறேன். 
    ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இந்தியாவுக்குச் சுற்றுலா வரும்போது 5,000 அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நிய பணத்தை சுங்க இலாகாவுக்கு தெரிவிக்காமல் கொண்டு வரலாம் என்ற விதி இருக்கும்போது வெறும் 3,200 சிங்கப்பூர் டாலருக்காக அவர்களை அலைக்கழிப்பது எந்தவிதத்தில் நியாயமாக இருக்க முடியும்? 
    இதேபோன்று திருட்டு பயம் காரணமாக வெளியூர் செல்லும்போது கையோடு நகையைக் கொண்டு செல்பவர்களிடம் இருந்து ஆவணமில்லை என்று கூறி பறிமுதல் செய்யப்படுகிறது.  இந்த சம்பவங்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  இது குறித்து விசாரணை நடத்தி இதுபோன்ற இன்னல்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp