காலமானார் திருநின்றவூர் வெ.பாண்டுரங்கன்
By DIN | Published On : 14th April 2019 03:06 AM | Last Updated : 14th April 2019 03:06 AM | அ+அ அ- |

கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திருநின்றவூர் வெ. பாண்டுரங்கன்(60) சென்னையில் சனிக்கிழமை (ஏப்.13) காலமானார்.
நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகத் திறன் கொண்டவர். அவருக்கு லதா என்ற மனைவி உள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், லயோலா கல்லூரி அருகில் உள்ள நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94449 18929, 73586 46821.