சுடச்சுட

  

  ரயில்களில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள்: மறுசீரமைப்பு பணிகளை முடிக்க காலக்கெடு

  By DIN  |   Published on : 16th April 2019 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  train-services

  ரயில்களில் பயோ கழிவறைகளில் துர்நாற்றத்தைப் போக்கும் வகையில், மறு சீரமைப்புப் பணியை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே வாரியம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
   ரயில்களில் பயோ கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் இருபக்கத்திலும் தலா இரு பயோ கழிவறைகள் வீதம் மொத்தம் 4 பயோ கழிவறைகள் உள்ளன. இந்த கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவது அதிகரித்தது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் புகார் தெரிவித்தனர்.
   இந்தநிலையில், ரயில்களில் பயோ கழிவறைகளில் துர்நாற்றத்தைப் போக்கும் வகையில், மறு சீரமைப்புப் பணியை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே வாரியம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. துர்நாற்றம் இல்லாத கழிவறையை உருவாக்க ரயில்வே மண்டலங்களுக்கு அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கழிவறையை சுத்தப்படுத்துவதற்கு கூடுதல் கருவிகளைக் கொள்முதல் செய்யவும், கழிவறையில் காற்றோட்ட வசதியை ஏற்படுத்தவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
   இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: கழிவறையில் உள்ள மலம் கழிக்கும் கோப்பை "பி' வடிவத்தில் இருப்பதால், கழிவை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், துர்நாற்றம் வீசியது. இதற்கு மாற்றாக " எஸ்' வடிவில் மலம் கழிக்கும் கோப்பை பொருத்தப்படவுள்ளது. இதன்மூலம், துர்நாற்றம் குறையும். கழிவறையில் இதை மாற்றும் பணி ஜூலையில் முடிவடையும்.
   எல்லா கழிவறைகளிலும் காற்றோட்டம் மேம்படுத்தப்படும். காற்றோட்ட வசதிகள் உள்ள கதவுகள் ஏற்படுத்தப்படும் என்றனர். ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி வரை, தெற்கு ரயில்வேயில் 6, 751 பெட்டிகளில் பயோ கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai