சுடச்சுட

  

  காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பாசன உரிமைகள் வென்றெடுக்கப்படும்

  By DIN  |   Published on : 17th April 2019 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ramadoss

  அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பாசன உரிமைகள் வென்றெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
   இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
   தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமைகள், அரசியல் உரிமைகள், கல்வி உரிமைகள், கலாசார உரிமைகள் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான வாக்குறுதிகளும், திட்டங்களும் எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதேபோன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
   பாஜகவும் கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சிதான் எங்கள் கொள்கை என்று கூறி மாநிலங்களுக்கு உரிமை வழங்க முன்வந்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பாசன உரிமைகள் வென்றெடுக்கப்படும். இதுதவிர ஒரு லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளோம். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai