சுடச்சுட

  

  நாடு தன்னிறைவு அடைய ஐசிஎஃப் உதவுகிறது: ஆளுநர் பன்வாரிலால்

  By DIN  |   Published on : 17th April 2019 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ICF

  ஐ.சி.எஃப் நிறுவனம் உள்நாட்டிலேயே அனைத்து வகை ரயில் பெட்டிகளையும், உள்நாட்டு பொருள்களை கொண்டு தயாரிப்பதன் மூலம் நாடு தன்னிறைவு அடைய ஐ.சி.எஃப் உதவுகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
   சென்னையில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 64-ஆவது ரயில்வே வார விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 200 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஆளுநர் பேசியது:
   ஐ.சி.எஃப்., ஆரம்பத்தில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கியது. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து, தற்போது அரண்மனை சொகுசு ரயில் பெட்டிகளை தயாரிக்கிறது. மேலும், அதி நவீன "வந்தே பாரத்' (ரயில் 18) பெட்டிகளையும் தயாரித்து வழங்குகிறது. வெளிப்படை நடவடிக்கை, காலம் தவறாமை ஆகியவை நாட்டை முன்னேற்ற அடைய செய்யும். உள்நாட்டிலேயே அனைத்து வகை ரயில் பெட்டிகளை உள்நாட்டு பொருள்களை கொண்டு ஐ.சி.எஃப் தயாரிக்கிறது. இதன்மூலமாக, நாடு தன்னிறவு அடைய ஐ.சி.எஃப் உதவுகிறது என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
   விழாவில், ஐ.சி.எஃப். தலைமை மின்னியல் பொறியாளர் என்.கே.குப்தா பேசுகையில், ஐ.சி.எஃப்.-இல் கடந்த ஆண்டில் 2,503 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை நிகழாண்டு 3,262 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பெட்டிகள் தயாரிப்பில் ஏறக்குறைய 30 சதவீத வளர்ச்சியை ஐசிஎஃப் பெற்றுள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai